Our foundation contributed over one million rupees to recipients with your help
நோக்கம்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும ஏழ்மையிலுள்ள தமிழ் மாணவர்களின் கல்விக்கு உதவுதல்.
இது தவிர வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்குத் தேவையேற்படும் போது அவசரகால உதவிகளும் செய்யப்படும்.
மதிப்புகள்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை நல்ல பெறுபேறுகளுடன் சித்தியடைய வைத்தல்.
கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை நல்ல பெறுபேறுகளுடன் சித்தியடைய வைத்துப் பல்கலைக்கழகத்திற்குத் தேர்வடைய வைத்தல்.
பல்கலைக்கழகத்திற்குத் தேர்வான மாணவர்களை நல்ல பெறுபேறுகளுடன் சித்தியடைய வைத்துப் பட்டம் பெற வைத்தல்.
வழிகள் / முறைகள்
அவர்களுக்கான தனியார் கல்விக் கட்டணங்களைச் செலுத்திப் படிக்க வைத்தல்.
பள்ளிக்கும் தனியார் கல்வி நிலையத்திற்கும் சென்று வருவதை இலகுவாக்கிப் போக்குவரத்தில் வீணாகும் நேரத்தை குறைப்பதற்குத் துவிச்சக்கர வண்டிகளை வழங்குதல்.
பாடசாலைப் படிப்பிற்குத் தேவையான உபகரணங்களை வழங்குதல்.
மாணவர்களின் குடும்பத்திற்கான தேவைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் குடும்பத்திற்கான சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல்.
தடைகள்
வடக்கு மற்றும் கிழக்கில் உதவி தேவைப்படும் ஏழை தமிழ் மாணவர்களைச் சரியாக அடையாளம் காணுதல்.
உதவி தேவைப்படும் அம்மாணவர்களின் உண்மையான தேவைகளைக் கண்டறிதல்.
அம்மாணவர்களுக்கான உதவிகள் சரியான முறையில் அவர்களைப் போய்ச் சேர்வதை உறுதி செய்தல்.
செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் உதவிகளால் உண்மையில் அம்மாணவர்கள் பயன் பெற்றுக் கொண்டிருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ளல்.
அளவீடுகள்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தேர்ச்சியடைந்து கல்விப் பொதுத்தராதர உயர் தரத்திற்குத் தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கை
கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையில் தேர்ச்சியடைந்து பல்கலைக்கழகத்திற்குத் தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கை
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறும் பட்டதாரிகளின் எண்ணிக்கை
சுயதொழில் வாய்ப்பால் உதவி பெற்று வறுமை நீங்கிய குடும்பங்களின் எண்ணிக்கை